விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டிபுரம் தொழில் தேவதை அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் சித்திரை பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 18ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு சாமி வழிபாடு நடைபெற்றது. 11ம் நாள் திருவிழாவான முளைப்பாரி திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முளை பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் வைத்து கும்மியடித்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து 12ஆம் நாள் திருவிழா இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து பின்வந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் வேல் குத்தியும் பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
நான்கு சமுதாயம் சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது திருவிழா ஏற்பாடு ஊர் தலைவர் முருகபூபதி தலைமையில நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த பூக்குழி திருவிழாவில் சத்திரப்பட்டி சம்சியாபுரம் அய்யனாபுரம் சங்கரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்காணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.







; ?>)
; ?>)
; ?>)