• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொன்னையன் உயிருக்கு ஆபத்து-புகழேந்தி பேட்டி

ByA.Tamilselvan

Jul 15, 2022

அதிமுக தலைவர் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசியிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் கை கூப்பி நின்றிருக்கும் புகைப்படமும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஸ்டாலின் நின்றிருக்கும் புகைப்பட மும் தான் இவை.நாஞ்சில் கோலப் பனுடன் பேசிய பொன்னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசி யிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதற்காக அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். என்றார் புகழேந்தி.