• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சி டாப்சிலிப்பில் பொங்கல் கொண்டாட்டம்!..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் கோழி கமுத்தியில் கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட இருபத்தி ஏழு காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன!

தமிழக அரசு உத்தரவின் பேரில் இங்கு ஆண்டு தோறும் யானை பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது. தற்பொழுது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்த நிலையில், முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்!

மேலும், வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இன்று பொங்கல் நிகழ்ச்சிக்கு வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு என உணவாக அளிக்கப்பட்டது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் கணேசன், வனச்சரகர்கள் மணிகண்டன், காசிலிங்கம், வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்!