கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் நடைபெறும் பாஜக வுக்கு எதிராக வியுகம் ஏற்படுத்த எதிர் கட்சிகளின் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா அரசுக்கும் இருக்கும். மேகதாதுவில் அணை பிரச்சினை இருக்கும் சூழலில்.முதல்வர் ஸ்டாலின் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக கருப்பு துண்டு அணிந்து போராட்டம் நடத்துவதாக பொன்னாரின் கருப்பு அடையாளம் அணிவிக்கு காரணம் சொன்னார்.
கர்நாடகா, தமிழக தண்ணீர் தாவா இன்று, நேற்று உள்ளதல்ல வெள்ளையர் ஆட்சிக் காலம் முதல் இன்று வரை தொடரும் பிரச்சினை.
இரண்டு மாநிலங்கள் இடையே தண்ணீர் பிரச்சனையில் நீதி மன்றத்தில் இருந்த வழக்கை.அன்றைய பிரதமர் இந்திரா, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி இடையே இருந்த ரகசிய வாக்குறுதியில். அன்றைய முதல்வர் கருணாநிதி அனைத்து வழக்கையும் திரும்ப பெற்றது தான் இன்று வரை தொடரும் நீர் பகிர்வுக்கு காரணம்.
அந்த காலத்தில் தஞ்சையை சேர்ந்த விவசாயி ரங்கநாதன் வழக்கை திரும்ப பெறததால் தான் இன்றும் இந்த வழக்கு உயிரோட்டம் தோடு இருக்கிறது.
கர்நாடகா எதிர் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்காது.கர்நாடக முதல்வரோடு கை குலுக்கி நிகழ்ச்சியில் தி மு க.,ஸ்டாலினாக கலந்து கொண்டு இருந்தால் எங்களுக்கு கவலை இருக்காது.
தமிழகத்தின் முதல்வராக, எட்டு கோடி தமிழர்களின் பிரதிநிதியாக பங்கேற்பதை குறித்து தான் கேள்வி எழுப்புகிறோம். இது தான் கூட நட்பு என சொன்ன பொன்னார்.
தமிழகம் மேகதாதுவில் அணை குறித்த தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவிக்க.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், முதல்வர் ஸ்டாலின் உடன் அழைத்துச் சென்று.கூட்ட அரங்கிற்குள் வராது வெளியே நின்று தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால். பாஜக முதல்வரை பாராட்டி இருப்போம் என தெரிவித்த பொன்னாரிடம் செய்தியாளர்கள் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் ஈடி மற்றும் ஆளுநர் செயலால் 2024 மக்களவை தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிக்கு உதவி செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லாது கடந்து போனார்.