• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல்அரசியல்வாதி பொன்.இராதாகிருஷ்ணன்..,

குமரி மாவட்டம் அரசியல் வாதிகளில் தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல் அரசியல் வாதி பொன். இராதாகிருஷ்ணன்.

நாடாளுமன்ற தேர்தல்களில் இது வரை 10_ முறை போட்டி.2_முறை வெற்றி.

சட்டமன்ற முதல் முயற்சியில். அ தி மு க வேட்பாளர் நாஞ்சில் முருகேசனிடம் தோல்வி.

பொன்னார் இரண்டாம் முறையாக நாகர்கோவில் போட்டியிடும் நேரத்திலும். ஒரு அதிசயம்.நாஞ்சில் முருகேசன் சுயேட்சையாக போட்டியிட போவதை. நாகர்கோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். எதிர் பாரத சூழல் ஒன்று நிகழ்வின் அதிசயம்.

பாஜகவின் வேட்பாளர் தேர்வில் முதியவர்களான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, முன்னாள் அமைச்சர் என்ற இரு முதியவர்கள் இடையே நடந்த வேட்பாளர் யார்.? என்ற ஓட்டபந்தையத்தில் பொன்னாருக்கு வெற்றி.

மக்கள் மன்றத்தில் வெல்லப்போவது யார் என்பதே. நாகர்கோவில் தொகுதி வாக்காளர்கள் முன் நிற்கும் கேள்வி குறி. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் வரலாற்றில் பாஜகவின் முதல் வெற்றி தொடருமா.?

எம்.ஆர். காந்தியின் சட்டமன்ற உறுப்பினர் கனவு நனவானது என்பது மட்டுமே உண்மை. தொகுதி மக்களுக்கு நடந்த நன்மை என்ன.? விடையே தெரியாத கேள்வியால்.

நாகர்கோவிலில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லது தி.மு.க. யார் போட்டியிட்டாலும் வெற்றி உறுதி என்பதே. நாகர்கோவிலில்
கள நிலவரம்.