• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு அத்துமீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.., எச்சரித்த காவல்துறை..!

பொள்ளாச்சியில் பிறக்க இருக்கின்ற 2022 புத்தாண்டையொட்டி இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழக அரசு ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று இரவு 10 மணி முதல் நாளை 10 மணி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடை ஆணை பிறப்பித்து இருந்தது. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகள், மதுபானக் கூடங்களில் பொதுமக்கள் அதிகம் அளவில் ஆங்கில புத்தாண்டில் கூடுவதை தவிர்க்க கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிவுறுத்தலின்படி அமலாக்கத் துறை மதுவிலக்கு போலீசார் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் தனியார் விடுதி மற்றும் மதுபான கடை உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அரசாணை மீறி செயல்பட்டால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதில் உதவி ஆய்வாளர் சுரேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.