• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசியல் காமெடியன் அண்ணாமலை : திருமா விமர்சனம்

Byவிஷா

Mar 28, 2024

தமிழ்;நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் காமெடியனாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பேசிய திருமாவளவன், பாஜகவை ஆதரிப்பவர்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும், எதிர்ப்பவர்களுக்கு ஒரு நிலையையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதற்கு எல்லாம் விசிக பயப்படாது. நமக்கு பானை சின்னம் நிச்சயம் கிடைக்கும். இந்த தேர்தலுடன் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என கூறியுள்ளார்.