மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள கருமாத்தூர் தனியார் மகாலில் உசிலம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள்., வழக்கத்திற்கு மாறாக கலர் சேலை அணிந்து வந்து உலக மகளீர் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வை செக்காணூரணி காவல் ஆய்வாளர் திலகராணி துவக்கி வைக்க அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் பெண் காவலர்களும் ஆடி, பாடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
காவல்துறையில் பல்வேறு மன உளைச்சல்கள் இருக்கும். அதனால் பல்வேறு குளறுபடிகள் மட்டுமல்லாது, ஒரு சில காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என ஒரு வதந்திகள் பரவி வரும் சூழலில், உசிலம்பட்டி காவல் சரக பெண் காவலர்கள் பெண்கள் தினத்தை மன அழுத்தம் மறந்து கொண்டாட அனுமதி அளித்த உயர் அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,
இது போன்று காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி, அவர்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகளை வழங்குவதன் மூலம் இன்னும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் பணியாற்ற வழிவகை ஏற்படும் என்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் எடுத்துக்காட்டாக அமைகிறதாக கூறப்படுகிறது.