மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் நட்சத்திரா சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய ஒரே மகளான நவ்யா, இவர் தனது பிறந்தநாள் ஆசையாக சாலையில் சுற்றி திரியும் சமூக நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என தாயிடம் கேட்டுள்ளார்.
அதனால் மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நள்ளிரவு 11 மணி முதல் 2 மணி வரை நூற்றுக்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு 15 கிலோ சிக்கன் 20 கிலோ அரிசி மூலம் சமைத்து மதுரை மாநகர் முழுவதும் உள்ள சமூக நாய்களுக்கு நேற்று நள்ளிரவு விருந்து வைத்துள்ளார்.
விலங்குகள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக மகளின் ஆசையை நிறைவேற்ற தாய் மேற்கொண்ட செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இருக்கும். இந்த காலத்தில் இந்த மாணவி மேற்கொண்ட இந்த செயல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மாணவி செய்த செயல் வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
மேலும், தீ சீஷாஸ் கென்னெல் ஃபவுன்டேசன் மற்றும் மாநகர காவல் துறையினர் நள்ளிரவு உணவு வழங்கும் போது உடன் இருந்துள்ளனர்.