திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு. இன்று முதல் நாள் நிகழ்ச்சியான உற்சவர் முருகன், தெய்வானைக்கும் திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் சண்டிகேஸ்வரர், சுப்பிரமணியசாமி, தெய்வானை தங்கக் குதிரை வாகனத்தில் மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.



