தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் பஞ்சமி நிலம் சர்வே எண் 190, 190/1 எண்ணியில் சுமார் 4 ஏக்கர் 90 செண்ட் நிலம் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சமி நிலத்தில் சுமார் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வேலி அமைக்கப்பட்டது.
இது குறித்து தேனி கிராம நிர்வாக அலுவலர் ஜீவா, தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து கம்பி வேலி அமைத்ததாக கே.ஆர்.ஆர். நகரை சேர்ந்த பவுன்ராஜ் (வயது 44) என்பவர் மீது தேனி காவல் துறை வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த கம்பி வேலியை அகற்ற வருவாய்த்துறை சார்பில் பவுன்ராஜுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கம்பிகள் அகற்றப்பட்டது.