• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதனை… பொது மக்கள் அவதி..,

ByKalamegam Viswanathan

May 19, 2025

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் திங்கள்கிழமை போலீஸார் கடும் சோதனைக்கு பிறகு பொதுமக்களை அனுமதித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கள் அளிப்பது வழக்கம்.
வழக்கம் போல பொது மக்கள் மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை ஆயூதப்படை போலீஸாரை வைத்து, பொதுமக்களை சோதனைக்கு உள்ளாக்கினர்.

இதை வந்தவர்கள் புலம்புவதை கேட்க முடிந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி சேகரிக்க வந்த நிருபர்கள், போட்டோகிராபர்களை பைகளை சோதிக்க தவறவில்லை.
இதில் வேகம் காட்டும் போலீஸார், மதுரை நகரில் ஷேர் ஆட்டோக்கள் அதிக நபரை ஏற்றிக் கொண்டு, அதிக வேகமாக செல்வதை கட்டுப்படுத்த ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.