நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பலநாயக்கன்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (34 )என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சமன்படுத்த கடந்த 25 நாட்களுக்கு முன் மண் தோண்டும் பணி செய்துள்ளனர். வேலை முடிவடையாத நிலையில் கடந்த ஒரு வாரத்திறகு முன் மீண்டும் மண் இட மாற்றும் வேலை செய்துள்ளனர். வேலை முடிவடையாத நிலையில் இன்று மீண்டும் மண்மாற்ற வயலுக்கு சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது காலின் நான்கு விரல்கள் மட்டும் தெரியும் நிலையில் பல நாட்கள் இருக்கலாம் என கருதக்கூடிய அளவிலான அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்டு பயந்து போன கார்த்திகேயன் உடனடியாக சிக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவர் கோபால் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். கோபால் கிராம நிர்வாக அலுவலர் தீபன் ராஜ்க்கு தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக தீபன் ராஜ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முளசி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்தபோது நான்கு கால்விரல்கள் மட்டுமே தெரிந்த நிலையில் ஆண் சடலம் என அடையாளம் காணும் வகையில் அமைந்திருந்த உடலை தோண்டி எடுக்க வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி இமயவரம்பன் பல காவல் ஆய்வாளர்களை வரவழைத்து இறந்து போன அழுகிய நிலையில் உள்ள உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்து இறந்தது யார் என அடையாளம் காண நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பலநாயக்கன் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்து போன நபர் யார் எங்கு கொன்றனர், எதனால் இங்கு வந்து புதைத்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.