• Thu. May 16th, 2024

திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வருவாய்த் துறையினர் கோரிக்கை

ByNamakkal Anjaneyar

Mar 14, 2024

திருச்செங்கோடு வட்டூர் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சரவணன்(49), பட்டா வழங்கும் விவகாரத்தில் தாக்கப்பட்டதை அடுத்து சரவணனை தாக்கிய சசிகுமாரை(37) கைது செய்ய வலியுறுத்தி கிராம நிர்வாக ஊழியர்கள் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல். கைது செய்யப்படாவிட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வட்டூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இங்கு கிராம உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பு வசித்து வரும் சசிகுமார் என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார் ஆனால் அவருக்கு வீட்டுமனை பட்டா வரவில்லை இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை அலுவலகத்தை விட்டு சரவணன் கிளம்பும்போது அவரை வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் பட்டா வழங்குவதில் தனது பங்கு எதுவும் இல்லை என்றும் எந்த விவரமாக இருந்தாலும் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரை கேட்டுக் கொள்ளவும் என்று கூறியும் சரவணனை சசிகுமார் தாக்கி உள்ளார் இதனால் காயம் அடைந்த சரவணன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் சங்கத்தினர் சசிகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள் கைது செய்ய தவறினால் நாளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் இது குறித்து கிராம உதவியாளர் சரவணன் கூறும் போது பட்டா எனக்கு ஏன் வரவில்லை என்று சசிகுமார் கேட்டு என்னை தாக்கினார் இதனால் நான் நிலைகுலைந்து போனேன் என்னை தகாத வார்த்தைகள் கூறி திட்டினார் எனக்கும் கதிர்வேலுக்கும் ஏன் பட்டா வரவில்லை என்றும் என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டினார் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாக கூறி தன்னை தாக்கினார் என சரவணன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரவணனுக்கு நீதி கேட்டு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தங்களுக்கு பணி பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *