• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Feb 14, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில் வசிப்பவர் துரை சமூக ஆர்வலராக உள்ள இவர் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு உதவி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் அரசு அலுவலகங்களில் உள்ள அவலங்கள் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு துரை அரசு நிர்வாகங்களில் உள்ள குறைபாடுகள் பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காணப்படாதது உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். இந்த நிலையில் நேற்று இரவு சோழவந்தான் 13 வது வார்டு பூமேட்டு தெருவில் சிவன் கோவில் முன்பு உள்ள இவரது வீட்டின் வாசலில் இவரது ஸ்கூட்டி இருசக்கர வாகனம் நிறுத்தி வைத்திருந்தார். இரவு 2:45 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் கழிவறை செல்வதற்கு வீட்டு வாசலுக்கு வந்த போது துரை என்பவரின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக துரையின் வீட்டு கதவைத் தட்டி அவரை அழைத்துள்ளார் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து வந்த துரை மற்றும்அவரது மனைவி அவரது மகன் ஆகியோர் வீட்டு வாசலில் வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மலமலவன தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உடனடியாக சோழவந்தான் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் அதிகாலை காவல்துறையினர் வந்து எரிந்த நிலையில் இருந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இரவில் இருசக்கர வாகனம் அருகே மதுபான பாட்டில் கிடந்ததும் சாப்பாடு பார்சல் சாப்பிட்ட நிலையில் கிடந்ததும் இரவில் மது அருந்தியவர்கள் செய்த செயலாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறினார். சோழவந்தான் பகுதியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் சமூக விரோத செயல்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். மாவட்ட எஸ்பி நேரடி கண்காணிப்பில் உரிய விசாரணை செய்து தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்த நிலையில் உயிர் பயத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் துரையின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் காவல் துறையிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.