• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நகர்புற தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்பாளர் சுபாஷினி அவர்களின் தலைமையில் கொடி அசைத்து கொடி அணிவகுப்பு துவக்கி வைத்தார்.
இதில், போலீசார் ஊர்க்காவல் படை, ஆயுதப்படை, சிறப்பு அதிரடி படை, தாலுகா காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள் என 750 பேரும், பொள்ளாச்சி உட்கோட்ட அப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி இந்த அணிவகுப்பில் வஜ்ரா வாகனம் இடம்பெற்றது. இதில் பொள்ளாச்சி கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி மற்றும் ஆய்வளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் கொடி அணிவகுப்பு கோவை சாலை பாலக்காடு ரோடு ராஜாமில் ரோடு உடுமலை ரோடு வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.