• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போதைப்பொருட்களுக்கு எதிராக 228 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை..,

BySeenu

Oct 12, 2026

கோவை மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்கும் நோக்கில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, உத்தரவின்பேரில் கோவை, மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (11.10.2026) அதிகாலை முதல் கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சிறப்பு அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஏற்கனவே ஈடுபட்ட நபர்கள், காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் உளவுத்தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான நபர்களைக் குறிவைத்து இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

மேலும், கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பாமல் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில், குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பகுதிகள் தீவிர சோதனைக்காக அடையாளம் காணப்பட்டன.
அதன்படி, கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட கோவில்பாளையம் மற்றும் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைகளில் 132 இடங்களும், பேரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட மதுக்கரை மற்றும் கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைகளில் 96 இடங்களும் என மொத்தம் 228 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .

இச்சிறப்பு நடவடிக்கையானது பேரூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கரிகால் பாரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் 42 தனிப்படைகளும், பேரூர் உட்கோட்டத்தில் 30 தனிப்படைகளும் என மொத்தம் 72 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 480 காவல்துறையினர் ஒரே நேரத்தில் 228 இடங்களில் நடைபெற்ற தீவிர சோதனைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இச்சிறப்பு அதிரடி சோதனையின் மூலம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறையினரால் ஏற்கனவே தேடப்பட்டு வந்த 2 தலைமறைவுக் குற்றவாளிகளும் இச்சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சோதனைகளின்போது பின்வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன:

இதில், 7 கிலோ 700 கிராம் கஞ்சா வும் மெத்தம்பெட்டமைன் எனும் உயர் ரக போதைப்பொருள் 2 கிராமும், போதை மாத்திரைகள் 1,000 எண்ணிக்கையும்,
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 45 கிலோவும், செல்போன்கள் 5 எண்ணிக்கையும், இருசக்கர வாகனங்கள் 16 எண்ணிக்கையும், 2 அரிவாள்கள்களும்
ரொக்கப்பணம் – ரூ.15,000 ஆயிரம் ரூபாயும் மேற்கண்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட 14 எதிரிகளையும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றச்செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற சிறப்பு அதிரடி சோதனைகள் கோவை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, தெரிவித்துள்ளார்.

மேலும், “போதையில்லா கோவை – Drug-Free Coimbatore” என்ற இலக்கை அடையும் வகையில், போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர கண்காணிப்பு, அதிரடி சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.