• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேசிய இசைப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து கோவை சி.எஸ். அகாடமி மாணவர்கள் சாதனை..,

BySeenu

Oct 12, 2026

தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில், கோவை சி.எஸ். அகாடமி பள்ளியின் இசைக்குழுவான சி.எஸ். ஹவுலர்ஸ் (CS Howlers) இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 270-க்கும் மேற்பட்ட பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் இசை நிகழ்த்தி மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்குழு, பல்வேறு போட்டிச் சுற்றுகளைக் கடந்து தேசிய அளவில் முதல் 20 இசைக்குழுக்களில் ஒன்றாகத் தேர்வானது. தொடர்ந்து இறுதிப் போட்டியில் முதல் ஐந்து அணிகளில் இடம்பிடித்து, இரண்டாம் இடத்தை வென்றது. இசைப் பயணத்தைத் தொடங்கியபோது இக்குழுவின் மாணவர்கள் 11 வயதுடையவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே Furtados Band-It தேசிய அளவிலான இசைப் போட்டியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள இக்குழு, 2025-ஆம் ஆண்டு GSIS Class of Chords போட்டியில் இரண்டாம் இடத்தையும், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற அதே போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.

தேசிய அளவிலான யமஹா இசைப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள சி.எஸ். ஹவுலர்ஸ் மாணவர்களின் சாதனை, அவர்களின் இசைத் திறமைக்கும், முறையான பயிற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது.