• Thu. Dec 12th, 2024

கம்பம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வுக்கு கொரோனா..!

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களாக அவருக்கு லேசான இருமல், சளி தொந்தரவு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, கொரோனா தொற்று பயத்தால், அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையெடுத்து, அவர் தொடர் சிகிச்சைக்காக அங்கேயே அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பயனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.