• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது!

ByP.Kavitha Kumar

Mar 3, 2025

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்​கு​கிறது.

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

பொதுத்​தேர்​வுக்கான அறைக் கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்​தப்பட உள்ளனர். மேலும், முறை​கேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சி​யர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமை​யிலும் சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள் ஏற்படுத்​தப்​பட்​டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்​தாள் கட்டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்​துறை அதிகாரிகள் பாது​காப்பு பணியில் ஈடுபடு​வார்​கள்.

மேலும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி நிர்வாகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத் தேர்வு குறித்த சந்தேகங்கள், புகார்களைத் தெரிவிக்க, பள்ளிக்கல்வி துறையின் ‘14417’ என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.