• Mon. Apr 29th, 2024

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

Byவிஷா

Apr 1, 2024

2023-24ஆம் கல்வியாண்டில் சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கி உள்ளது.
இன்று முதல் 13-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன. 2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து திட்டமிட்டபடி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படும்.
11ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *