• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனியை மது கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற்ற உறுதி மொழி ஏற்பு

Byvignesh.P

Jun 1, 2022

தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் ஏகே கல்வி தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.இத்தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் அன்னகொடி அவர்களின் 59வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வீரப்ப அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அன்னதானம் வழங்கபட்டது.
இதில் ஏகே தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தேனி பகுதியை சேர்ந்த பொது மக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று முதல் மது கஞ்சாவை ஒழிப்பது தொடர்பாக உறுதிமொழி எற்றனர்.இந்த உறுதி மொழியில் போதை என்னும் பேயை ஒழிப்போம் அரசுக்கும் அரசு அதிகாரிக்கும் துணையாய் இருப்போம்.போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் ஒன்றிணைவோம் ஜெய்ஹிந்த் போன்ற வாசகத்தை கூறி உறுதி மொழி ஏற்றனர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த ஏகே கல்வி தொண்டு நிறுவன தலைவர் அன்னகொடி செய்தியாளர் சந்திப்பில் தேனி மாவட்டத்தில் சிறுவர்கள் போதை பழக்கமான மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அதிகமாக ஈடுபடுவதாகவும் இதனை தடுக்கும் பொருட்டு மது மற்றும் கஞ்சாவை ஒழிப்பது தொடர்பாக கவுன்சிலிங் அமைப்பதாகவும் கூறினார்.