தனது பதவி உயர்வுக்கு தடையாகஇருந்த தேனி மாவட்டகுழந்தைகள் வளர்ச்சி குழு திட்ட பெண் அதிகாரியை நேற்று அலுவலகத்தில் புகுந்து இளநிலை உதவியாளர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார் . இதில் காயமடைந்த பெண் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணிபுரிகிறார் ராஜராஜேஸ்வரி வயது 52. அதே அலுவலகத்தில் 2015ம் ஆண்டு முதல்போடியை சேர்ந்த உமாசங்கர் 56 என்பவர் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் சரியாக பாராமரிக்காத ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது 70b விதிமுறையின் கீழ் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி அலுவல் நடவடிக்கை எடுத்துள்ளார்.ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்பும் அதே நிலை நீடித்ததால் 17 பி விதிமுறையின் கீழ் அலுவல் நடவடிக்கை எடுத்தார்.
இது போன்ற செயல்களால் இடம் மாறுதலாக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர்
இந்நிலையில் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான போடிக்கு வந்தார் உமாசங்கர். நேற்று பிற்பகல் தேனிக்கு வந்தார். பையில் பெரிய அரிவாளை மறைத்து வைத்தபடி தேனி குழந்தைகள் வளர்ச்சிக்குழு அலுவலகத்தில் நுழைந்தார்.
அங்கு பணியில் இருந்த ராஜராஜேஸ்வரியை தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார் உமாசங்கர் . இத் தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆஜராகி விசாரணை செய்து குற்றவாளியான உமாசங்கரை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும் போதும் ராஜராஜேஸ்வரி மயக்க நிலையில் உள்ளார் அதனால் அவரிடம் விசாரணை செய்யமுடியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்பே முழுவிபரம் தெரியவரும் என்றனர்.