• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கடந்த ஆட்சியின் திட்டங்கள் – வெள்ளை அறிக்கை தாக்கல்

By

Sep 9, 2021 , , ,

கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதன்படி கடந்த அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமை என்ன? என்பது தொடர்பான விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.