• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தங்கம் வாங்க திட்டம்… இச்சலுகை 4 நாட்கள் மட்டுமே

Byகாயத்ரி

Jun 20, 2022

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருப்பதனால் விலை உயர உயர வட்டி மூலமாக அதிக லாபம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். தங்கப்பத்திரம் வாங்கி எட்டு வருடங்கள் வைத்திருக்கலாம். எட்டு வருடம் முடிந்த பிறகு வருமானத்திற்கு வரி செலுத்த தேவை கிடையாது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் தங்கபத்திர விற்பனை இன்று தொடங்குகிறது.

ஜூன் 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கபத்திரம் வாங்கலாம். ஒருகிராம் ரூ.5091 என விற்கப்படும் தங்கப் பத்திரத்தை ஆன்லைனில் வாங்கினால் கிராமுக்கு ரூபாய் 50 தள்ளுபடி உண்டு. ஆன்லைன் தவிர வங்கிக் கிளைகள் தபால் நிலையங்களில் நேரடியாகவும் இதை வாங்க முடியும்.