மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வர் திட்டத்தின் கீழ் விருதுநகர் மண்டல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 30க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்களும் துறை சார்ந்த நிறுவனங்களும் மாணவர்களை தேர்வு செய்தனர் .நிறுவனங்கள் சார்பாக நுண்ணறிவு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு பெற்றவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு ஆய்வு செய்யப்பட்டு நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை சார்பாக நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதில் பல்வேறு கல்லூரியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் முகமது ஜலில் அவர்கள் தலைமை தாங்க கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம் .சீனி முஹைதீன் ,எஸ். எம் .சீனி முகமது அலி யார், எஸ்.எம் .நிலோபர் பாத்திமா எஸ்.எம் .நாசியா பாத்திமா முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகுத்து துவக்கி வைத்தனர். ஏற்பாட்டினை சேது பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு கழக அதிகாரி ஜேசுராஜ் மற்றும் ரமேஷ் மற்றும் பலர் செய்திருந்தனர். இதனை கல்லூரி செய்தி தொடர்பாளர் கணிதத்துறை தலைவர் லக்ஷ்மண ராஜ் தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)