• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Byவிஷா

Dec 11, 2024

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் (டிச.13) மகாதீபத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை மலையில் திடீரென சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு குழு தெரிவித்தது. இதன் காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டாம் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியதை அடுத்து, திருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சற்று முன் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கார்த்திகை தீப திருவிழாவில் மழையின் உச்சியில் பரணி தீபம் ஏற்றுவதற்காக மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பக்தர்கள் அதிருப்தியில் இருந்தாலும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.