• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

செஸ்ஒலிம்பியாட் விழா மேடையில் மோடியின் படம்

ByA.Tamilselvan

Jul 28, 2022

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை சேர்க்க கோரிய வழக்கில் தீர்ப்பு மதுரை உயர்நிதிமன்ற கிளைஒத்திவைத்தது.மேலும்
தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் பிரதமர் மோடி ராஜா,அண்ணாமலை ராணி,வானதி குதிரை என சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் இன்று ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மோடி கலந்து கொள்ளும் நிலையில் அங்கிருக்கும் பேனரில் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படமும் அதில் உள்ளது.