தேனி மாவட்ட ஏ ஐ டி யு சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பதிவு எண் 98 /தேனி -மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 4 /8 /2024 ஆம் தேதி தேனியில் சிபிஐ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவு சங்கத் துணை விதிகளுக்கு எதிராக செயல்பட்ட க.பிச்சைமுத்து மாவட்ட செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஏ ஐ டி யு சி சம்பந்தமாக யாரும் பிச்சமுத்துவிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பொறுப்புச் செயலாளராக எம். முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தேனி மாவட்டம் ஏ ஐ டி யு சி மாவட்டத்தின் பொதுச் செயலாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.


மேலும், இது பற்றி விவரம் அறிய தேனி மாவட்டம் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமாரிடம் பேசினோம் ….

ராஜ்குமார் (தேனி மாவட்டம் ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர்)
கட்சிக்கு விரோதமா நடக்கலாமா பிச்சைமுத்து.., எங்களுக்கே தெரியாமல் தூய்மை பணியாளர்களை ஒன்று திரட்டி கட்சி மேலிடம் சொல்வதைக் கேட்காமல் அவர் பெயரை தன்னிச்சையாக நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதோடு, கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தினால், நாங்கள் இன்று சிபிஐ அலுவலகத்தில் முறைப்படி கட்சி மேலிடத்தில் தகவலை தெரிவித்து விட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் ஒன்று கலந்து பேசி ஒருமனதாக பிச்சமுத்துவை கட்சியிலிருந்து இருந்தும், ஏ ஐ டி யு சி தேனி மாவட்டம் அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது. இதை மட்டும் தான் உங்களிடம் பகிர முடியும் தோழரே என்று ராஜ்குமார் தெரிவித்தார்.