• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை 

இந்த நிலையில் தருவைகுளம் கடற்கரையில் இருந்து மீன் தடை உத்தரவு மீறி ஒரு விசைப் படகில் 10 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் கூத்தக்குழி கடற்கரையில் இருந்து நான்கு கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு பைபர் படகில் வந்த 4பேர் கொண்ட கும்பல் விசைப்படகு மீனவர்கள் மீது திடீரென ஆயுதங்களால் தாக்கினார்களாம்.

இதை எதிர்பாராத மீனவர்கள் சுதாரிப்பதற்குள் பைபர் படகில்வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக விசைப்படகு மீது வீசினார்களாம். இதில் விசைப்படையில் இருந்த தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அத்தியப்பன் மகன் பெரிய ராஜா (17) என்பவர் தீக்காயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் கடலில் வேகமாக சென்றுவிட்டனர்.

உடனடியாக காயமடைந்த மீனவரை சக மீனவர்கள் மீட்டு திருச்செந்தூர் கடற்கரைக்கு கொண்டு வந்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்
தூத்துக்குடி – திருச்செந்தூர் பகுதி மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”