• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கிருங்காங்கோட்டையில் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு

ByG.Suresh

Dec 26, 2023

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரியும் மல்லிகா என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக நான்கு பேரும் வந்து உருட்டு கட்டையால் தாக்கி, பெட்ரோல் பங்க் கண்ணாடி, கதவுகள் அகிவற்றை அடித்து நொறுக்கியதாக கூறப்படும் நிலையில் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகாரிக்க கோரியும், இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பாதுகாப்பு கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.