கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் அணைகளில் இருந்து கணிசமான உபரி நீர் திறப்பு .

இதனால் தோவாளையில் உள்ள புத்தன் கால்வாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது – வெள்ளமடம் அருகே கிராமங்களில் இருந்து கயிறு கட்டி மக்ககளை கரையேற்றி வருகின்றனர் இங்குள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்லமுடியாமல் பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளத்தில் ஊர் மக்கள் பாதுகாப்பாக சிகிச்சைக்கு வந்த குழந்தைகளை மருத்துவமனை கொண்டு சேர்த்தனர்.

நாகர்கோவில் அருகேயுள்ள தோவாளை அருகே சாகய நகர் ஶ்ரீகுமார் நகர் பகுதியில் மழை வெள்ளம் புகுந்து வெள்ளகாடக காட்சி அளிக்கிறது .இருநூற்று ஜம்பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது மேலும் பொய்கை அனையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 27 வயது லட்சுமண் என்பவர் பலி.

தென் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை தமிழகத்தை கடந்தாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையினால் மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளகோட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆறுகள் கால்வாய்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பல கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடத்தில் இருந்து தாழாக்குடி செல்லும் சாலையில் அருகில் உள்ள புத்தன்அணை மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் புகுந்து கிராம மக்கள் ஊரை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.

மேலும் நாகர்கோவில் அருகேயுள்ள தோவாளை பகுதியில் உள்ள சாகயநகர் ஶ்ரீகுமார் நகர் போன்ற பகுதியில் உள்ள 250 க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கிறது.புதுகிராமம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் வெள்ளம்புகுந்து வெள்ளகாடக காட்சியளிக்கிறது வகுப்பறைக்குள்ளும் தண்ணீர புகுந்து உள்ளது.மேலும் பொய்கை அனையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 27 வயது லட்சுமண் என்பவர் பலியானார்.

வெள்ளபெருக்கு காரணமாக நெல் வயல்கள் வாழைத் தோப்புகள் தென்னந்தோப்புகள் தண்ணீரில் மூழ்கியது இதனால் பல கிராம மக்கள் வீடுகளில் முடங்கினர் இது போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது