உசிலம்பட்டியில் தேவர் சிலை அருகில் நேதாஜிக்கு வெண்கல சிலை அமைக்க நகர மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அனுமதி வழங்குமாறு பாரதியார் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகள் அமைந்துள்ள வளாகத்தில் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருஉருவ வெண்கல சிலை பாரதியார் பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அமைக்க உசிலம்பட்டி நகர மன்றத்தின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்குமாறு நகர மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் துணை நகர் மன்ற தலைவர் தேன்மொழி மற்றும் பொறியாளர் பட்டுராஜன் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் முருகன் ஜி தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.,

பின்னர் நடைபெறும் நகர் மன்றக் கூட்டத்தைல் அனைத்து நகர்மன்ற வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தனர்.,
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
