• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அன்கித்திவாரி சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனுத்தாக்கல்..!

Byவிஷா

Dec 15, 2023

அரசு மருத்துவரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி சார்பில் சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் அனுராதா இது முக்கியமான வழக்கு ஆகையால் முதல் வகுப்பு கொடுக்கப்பட கூடாது என வாதிட்டார். அமலாக்கத்துறை அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம் அமலாக்கத்துறை அதிகாரி போஸ்ட் கிராஜுவேட் வருமான வரி கட்டி வருகிறார். இவருக்கு தகுதியின் அடிப்படையில் சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சிறிது நேரத்தில் இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என தள்ளி வைத்துள்ளார்.