

தனது கூட்டாளியான விருதுநகர் செந்தில் குமாரை கடந்த 2021ம் ஆண்டு கடத்தி சென்னையில் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த வழக்கில்
கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை
போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நீதித்துறை நடுவர் கவிதா இந்த மனுவை இன்று பிற்பகல் விசாரிக்கிறார்வரிச்சியூர் செல்வத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு- 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான விசாரணையில் நீதித்துறை நடுவர் கவிதா உத்தரவு.
