
தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் என்று பெயர் எடுத்த ஷர்மிளாவை தனியார் பேருந்து நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ள தகவல் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கின்றது.
கோவை மாவட்டம் கோவையில் ஷர்மிளா என்ற பெண்ஓட்டுநர் தனியார் பேருந்து நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டார். ஷர்மிளா பஸ்ஸை இயக்கும் போது அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. இதைக் கண்ட social மீடியாக்கள் ஆகா. ஓகோ என்று புகழின் உச்சிக்கு அழைத்து சென்றனர். இதைக் கண்ட அரசியல் பிரமுகர்களும் பிரபலமான சமூக சேவர்களும், பெண் அமைப்பினரும் பாராட்டி ஷர்மிளாவை வந்தனர். இன்று காலை தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழி ஷர்மிளாவை கண்டு அவருடன் பேருந்து பயணம் செய்திருக்கிறார். இதற்கு ஷர்மிளாவும் எனக்கு மிக்கற்ற மகிழ்ச்சி என மகிழ்ச்சியை வெளிப்படுத்த திடீரென அந்த தனியார் பேருந்து நிறுவனம் ஷர்மிளாவை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மர்மம் என்னவாக இருக்கும்?

