

லண்டன் பென்னிகுயிக் சிலை குறித்து எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அமைச்சர் சொன்ன உண்மைக்கு முரணாக பதில் சட்டசபையில் பதிவு.
லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலை தமிழக அரசால் ஏற்பட்ட குளறுபடியால் மூடி இருப்பது தமிழினத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் உரிய விளக்கம் தரவேண்டும்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜீவாதார உரிமையாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, ஜான்பென்னிகுயிக்கு தமிழக அரசின் சார்பிலே லண்டனில் அமைக்கப்பட்ட மார்பளவு சிலைக்கு, செலவு கணக்கிலே உள்ள குளறுபடி ஏற்பட்டு தமிழகத்தின் மானம் லண்டனில் பறிபோய் உள்ளது.
இதுகுறித்து சட்டமன்றத்தில் எடப்பாடியார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். 3 மாதம் ஆகியும் அதன் மீது எந்த அக்கறையும் செலுத்ததால், தமிழர்கள் மானம் கடல் கடந்து வெளி நாட்டில் பறிபோய் உள்ளது.
லண்டன் கேம்பர்லியில் உள்ள பென்னிகுயிக் சிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார்.அப்போது இங்கிலாந்து ராணி இறந்து விட்டதால், அந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தினார்.
இந்த சிலை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ10.65 லட்சம் ஒதுக்கியது. ஆனால். கூடுதலாக ரூ 28 லட்சம் செலவாகிவிட்டது கூறி பாக்கிதொகை கேட்டு சிலை மூடப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா முல்லை பெரியார்அணை கட்டிய ஜான் பென்னிகுயிக்கு மணிமண்டபம் கட்டி மார்பளவு சிலை வைத்து, அரசின் சார்பில் விழா நடத்தி,நன்றி மறவா இனம், தமிழ் இனம் என்று உலகத்திற்கு நிரூபித்துக் காட்டினார், இதன் மூலம் தென்தமிழக மக்கள் அம்மாவிற்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.ஆனால் இன்றைக்கு தமிழக அரசு தமிழர்களின் மானத்தை லண்டனில் பறி கொடுத்த கொடுமை நடந்து விட்டது.தமிழ் இனத்தினுடைய மானத்தை லண்டனில் காற்றிலே பறக்க விட்ட அந்த கூத்து உலகத் தமிழினத்திற்கு கவலை ஏற்பட்டுகிறது.

தற்போது அந்த சிலையை மீண்டும் திறக்க பிஜேபி தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கனவே சட்டசபையில் எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சாமிநாதன் .
லண்டனில் அமைக்கப்பட்ட சிலைக்கு அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி திறக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது சட்டசபையில் பதிவாகி இருக்கிறது.
அப்படி என்றால்அந்த தனியார் நிறுவனத்திற்கு அரசு பாக்கி வைத்துள்ளதா ?அரசு நிர்ணயத்தை விட அந்த கூடுதல் செலவை 28 லட்சம் இந்த அரசு தமிழக அரசு கொடுக்க முன் வந்ததா? கொடுத்ததா? இதில் தமிழக அரசு அவர்களை ஏமாற்றியதா இல்லை தனியார் நிறுவனம் தமிழக அரசை ஏமாற்றி இருக்கிறார்களா ?என்பதெல்லாம் இன்றைக்கு ஒரு மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விவாதமாக இருக்கிறது .
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகிகள் பேசி திறக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார் .அப்படி என்றால் லண்டன் சிலை குறித்து அமைச்சர் பதிவு செய்தது உண்மைக்கு மாறான தகவலாக இருக்கிறது.
முதலமைச்சர் தனது தந்தைக்கு பேனா நினைவு சின்னத்திற்கு 84 கோடி கடலிலே கொண்டு போய் வைப்பதற்கு அக்கரை காட்டுகிறார். தந்தைக்கு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிலை திறக்க அக்கறை காட்டுகிறார். மருத்துவமனைக்கு, விளையாட்டு மைதானத்திற்கு பெயரை சூட்டி மார்பளவு சிலை வடிந்து, வெண்கல சிலை இனி தங்கத்தால் கூட கருணாநிதிக்கு சிலை வைக்க ஆர்வம் காட்டும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக தன் சொத்தை எல்லாம் விற்று பலமுறை அது வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது கூட இன்றைக்கும் உறுதியாக பாதுகாப்பாக இருக்கிற அந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த ஜான் பென்னிகுயிக் ஒரு சிலை வைப்பதற்கு அக்கறை காட்டவில்லை என்று சொன்னால் ஸ்டாலின் சுயநலத்தினுடைய உச்சமாகத்தான் காட்சி தருகிறார்.
எடப்பாடியார் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறபோது செய்தி துறை அமைச்சர் சொன்ன அந்த தகவல் உண்மைக்கு முரணாக இன்றைக்கு சட்டசபையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே அதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்.
இந்த தமிழ் இனத்திற்காக தன் சொத்தை எல்லாம் விற்று தான் சொந்த செலவில் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த பென்னிகுயிக் இருக்கு சிலையை திறப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லை என்று சொன்னால், ஒட்டுமொத்த விவசாயிகளும் இன்னைக்கு கொந்தளிப்பிலே, வேதனையில் இருக்கிறார்கள் என்பதை முதலமைச்சர் அறிவாரா ?ஆகவே லண்டன் உள்ள சிலைகுறித்து முதலமைச்சர் விரிவாக விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
