

பண்டிகை காலம் என்பதால், தமிழகத்தில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அதேபோல், சினிமா படப்பிடிப்புகளுக்கு முழு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள், கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
