களையாகப் படரக்கூடிய ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ என்ற வெளிநாட்டு கடல்பாசியை வணிக ரீதியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வளர்க்க அனுமதி வழங்கினால், பவளப் பாறைகளை அழித்துவிடக்கூடிய ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரையிலும் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 21 தீவுகள் அமைந்துள்ளன. இத்தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் , கடல் பாசிகள், கடல் புற்கள், கடல் சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.
குறிப்பாகப் பாலூட்டி இனங்களான கடல் பசு, டால்பின்கள் அதிகமாகக் காணப் படுகின்றன. இந்தியக் கடல் பகுதியிலேயே அதிகளவில் 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்குதான் உள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டுக் கடல் பாசி வடிவில் மன்னார் வளைகுடா பவளப்பாறைகளுக்கு புதிய ஆபத்து உருவாகியுள்ளது. இது குறித்து ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியதாவது: பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து, 1995-ல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ எனப்படும் வளர்ப்பு கடல்பாசி, பவளப்பாறைகளின் மீது படர்ந்து, அவற்றை முற்றிலுமாக மூடி, ஒளிச்சேர்க்கை நடைபெறவிடாமல் தடுத்து உயிரோடு அழித்து விடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
தற்போது குஜராத்திலுள்ள மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் மன்னார் வளைகுடாவில் கடற் பாசி சாகுபடிக்காக மேலும் ஐந்து இடங்களை பயிரிடுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் களையாகப்படரக்கூடிய ‘கப்பாபைகஸ் ஆல்வரேசி’ வெளிநாட்டு கடல்பாசியை வளர்க்க அனுமதி வழங்கக்கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]
- வீட்டில் தேசியக்கொடி ஏற்ற மாணவர்களுக்கு அறிவுறத்த வேண்டும்-பள்ளிக்கல்வித்துறைநாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் […]
- நேற்று ராஜினாமா… இன்று மீண்டும் முதல்வர்பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார் ஆனால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்குபின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு இருக்கும். […]
- பொது அறிவு வினா விடைகள்நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?ஒடிசா ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு […]
- பா.ஜ.க வை ஆதரித்தால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும்பாஜக வை வளரவிட்டால் மக்களின் ஓட்டுரிமை பறிபோகும் என அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை.உத்தரபிரதேசத்தின் கன்னாஜ் மாவட்டத்தில் […]