• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

லண்டனில் தமிழ் மரபுரிமை மாத கொண்டாட்ட அனுமதி

Byமதி

Dec 10, 2021

ஆண்டுதோறும் கனடாவில் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாடப்படுதைப் போல, லண்டனிலும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக கடைபிடிக்கப்படும் என லண்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்துக்கு மாநகர நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி லண்டன் நகர பேரவையில் கன்சர்வேட்டிவ் உறுப்பினர் நிக் ரொஜர்ஸ் தமிழ் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

எனவே வரும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக லண்டனில் கடைபிடிக்கப்பட்டு தமிழ் மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.