திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு

ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது.
பொங்கல் பரிசு தொகை கொடுப்பதால் விவசாயத்திற்கு புதிய கடன் வழங்க முடியாது அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு,
அண்ணாமலை அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியைப் போல் குளறுபடி கிடையாது. அனைத்து திட்டங்கள் மூலமும் அரசின் வருவாய் உயர்த்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். நிதி நிலையை கையாளுவதில் தமிழக அரசு போல் இந்தியாவில் எந்த அரசும் இருக்க முடியாது.
அதிமுகவிடம் வரும் தேர்தலில் பாஜக 50 இடத்திற்கு மேல் கேட்பது குறித்த கேள்விக்கு
அதிமுக கட்சி விவகாரம். அதில் எந்த கருத்தும் இல்லை. எத்தனை சீட்டு வாங்கினாலும் நிற்காமல் போனாலும் கவலையில்லை.
ராமதாஸ் திமுகவிற்கு வாழ்த்து கூறியது குறித்த கேள்விக்கு,
நல்லாட்சி தான் அதனை மறுப்பதற்கு எதுவும் இல்லை. அனைத்து துறைகளிலும் தலை உயர்ந்து நிற்கிறது. அனைத்து துறைகளிலும் உயர்ந்து இருக்கும் தலைவராக முதலமைச்சர் உள்ளார்.
விஜய் இடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்த கேள்விக்கு,
அதைப்பற்றி ஒன்றும் இல்லை. அவர் முதலில் தேர்தலுக்கு வரட்டும். தேர்தலை சந்தித்த பின் தான் அவர் பின்பு என்ன பலம் இருக்கிறது என்று தெரியும். தோராயமாக என்ன பலம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்பு அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். இது திமுக சரித்திரத்தில் இல்லை. இனி வருகின்ற 2026 தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவார். இதுவரை இல்லாத அளவில் Record Break செய்வார்.
பெண்களுக்கான இனிப்பான செய்தி என்ன என்ற கேள்விக்கு,
விடுபட்ட மகளிர்களுக்கும் மகளிர் உதவித்தொகை கொடுக்கப்படும்.
திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு
ராமதாஸ் உள்ளத்தில் இருந்து உண்மையை கூறியுள்ளார். நல்லாட்சி என்று கூறியுள்ளார். தேர்தல் தலைமை இருப்பதால் மற்றவர்களுக்கு சொல்ல அச்சமாக உள்ளது. இல்லையென்றால் அனைவரும் நல்லாட்சி என்றே கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நல்லாட்சி என்று டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியுள்ளார்.




