• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பேரறிவாளன் விடுதலை- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ByA.Tamilselvan

May 18, 2022

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
.பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா,மாநில அரசுக்கு உள்ளதா என்பது போன்ற வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தன.தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் மனுவை கிடப்பில் போட்டது குறி த்து உச்சிநீதிமன்றும் கடும் எதிர்ப்புதெரிவித்தது. நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.
30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டார்.
ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.