• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு சலுகைகள்…

Byகாயத்ரி

May 18, 2022

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள இன்ஃபோசிஸ் தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு 13 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும், கூடவே போனஸ் வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தில் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் சிறந்த பதவிகள் வழங்குவதற்கு இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதுபோக சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஏஐ, மெஷின் லேர்னிங் போன்ற தொழில் நுட்ப திறன்களை கற்றுக்கொள்ள இன்ஃபோசிஸ் வாய்ப்பு வழங்குகின்றது.

கடந்த மார்ச் மாதம் வரை இன்போசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 314,015 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஊழியர்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் சம்பள உயர்வு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கு புதிய வாய்ப்புகளும் திறன் பயிற்சியும் வழங்கப்படுவதை உறுதி செய்யும்படி மேனேஜருக்கு இன்போசிஸ் நிறுவனம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்னும் கூடுதலாக ஏராளமான பிரஷர்களை வேலைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.