பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளனி அவர்கள் இன்று (01.09.2025) காலையில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விடுதியில் ஆய்வு செய்தார்.

பின்னர் விடுதியில் தங்கிய பயிலும் மாணவ மாணவியர்களிடம் தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கபடுகிறதா, கழிவறை மற்றும் விடுதியை தூய்மையாக பராமரிக்கிறார்களா என்பது குறித்து கேட்டறிந்து விடுதி காப்பாளரிடம் விடுதியை தூய்மையாக பராமரித்திட அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை மாணவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவு பட்டியல் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்தார்.

மேலும் மாணவ மாணவியரிடம் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழக அரசு, பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
