
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு இன்று மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் அருண்நேரு, இன்று பகல் 12.12 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கற்பகத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், தொட்டியம் தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர்.
