விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புராதாண நகரமாகும் இங்கு ஆண்டாள் அவதரித்தார் திருப்பாவை பாடினார் நிகழ்கால கடவுளாக திகழ்ந்து வருகிறார் . 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் தமிழ்நாட்டின் வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்ந்து வருகிறது 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் ஸ்ரீவில்லிபுத்திரச் சேர்ந்தவர்கள்( ஆண்டாள், பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை மிகவும் பிரசித்தி பெற்றது தற்போது வரை சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது இவ் ஊரில் அதிக அளவு பால்கோவா உற்பத்தி செய்யப்படுகிறது உலகத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பால்கோவா இங்கிருந்து அனுப்பப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் சுவையாகவும் தரமாகவும் இருக்கும் எனவே அனைத்து ஊர்களிலும் இருந்து பால்கோவாவுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர் மேலும் சதுரகிரி ஐயப்பன் கோவில், குற்றாலம் ஆகியவற்றிக்குச் செல்லும் பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக சென்று செல்வதால் அவர்கள் அதிக அளவில் பால்கோவாவே வாங்கி செல்கின்றனர் ஆண்டாள் கோயிலுக்கும் வந்து வழிபட்டு செல்கின்றனர் அமாவாசை, பௌர்ணமி நேரங்களில் சதுரகிரி கோவிலுக்கு அதிக அளவில் மக்கள் சேர்ந்து செல்லுகின்றனர் மேலும் தற்பொழுது மழையேற்று பயிற்சிக்கும் சதுரகிரி மலை பயன்படுத்தப்படுகிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் மதுரை செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் செங்கோட்டையில் இருந்து அதிக அளவில் மதுரைக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் பேருந்துகளில் அதிக மக்கள் வந்து செல்வதால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை செல்வதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளூர் பயணிகளுக்கு அமர்ந்து செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது மதுரை வரை நின்று தான் செல்ல வேண்டிய ஒரு அவல நிலை உள்ளது எனவே ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அதிக அளவில் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
