இந்திய விண்வெளித்துறையில் தலைவராக குமரியின் மைந்தன் நாராயணனுக்கு சொந்த ஊர் மக்கள் பாராட்டு விழா கண்டனர்.
தமிழகத்தில் எழுத்தறிவு பெற்றவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் குமரி மாவட்டம் மக்கள் என்ற பெருமையை நிலை நாட்டுவது போல், குமரியை சேர்ந்தவர்களில் மூன்றாவது விஞ்ஞானி விண்வெளித் துறையின் தலைவர் என்ற பெருமை மிக்க புகழ் விஞ்ஞானியான இஸ்ரோவின் தலைவர் நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் அருகே உள்ள மேலக்காட்டுவிளையில், ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்,தென் இந்திய திருச்சபையின் குமரி மாவட்ட பேராயர் செல்லையா, பூஜித குரு பாலபிராஜதிபதி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்டத்தின் இந்து அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், ஒன்றிய அரசின் முன்னாள் இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், மகேந்திர கிரி இஸ்ரோ இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், அனைத்து கட்சி பிரமுகர்கள் ஏராளம் பேர் பங்கேற்றனர்.

நிகழ்வில் இஸ்ரோ தலைவர் நாராயணன் குறித்து ஆட்சியர் அழகு மீனா தெரிவித்தது.
இஸ்ரோ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணன் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அவர் கடந்து வந்த வாழ்க்கை பாதை பள்ளி, கல்லூரிகளில் குறும்படமாக வெளியிடப்படும். இதனை பார்க்கும் மாணவர்கள் நிச்சயம் விண்வெளி துறையில் சாதிப்பார்கள். மேலும் இந்தியா நாராயணன் தலைமையில் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைக்கும் என்றார்.


இஸ்ரோ தலைவர் நாராயணன் அவரது பேச்சில். என்னை இஸ்ரோ தலைவராக தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிறந்த நாட்டிற்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கிய இறைவனுக்கும், பெற்றோர் மற்றும் எனக்கு கல்வி கற்றுத்தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ ஹரி கோண்டாவில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்ட இருக்கிறது. விண்வெளித்துறையில் இந்தியா மேலும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என தெரிவித்தவர்.

பிரதமர் மோடி மத்திய வரவுசெலவு திட்டத்தில் விண்வெளி துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

