• Tue. May 30th, 2023

சோழவந்தான் அருகே குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

ByKalamegam Viswanathan

May 5, 2023

சோழவந்தான் அருகே மேலக்காலில் குண்டும் குழியுமான சாலையால் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தினசரி வெளி நோயாளிகளாகவும் மற்றும் வாரம் தோரும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்காகவும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக பலரும் மருத்துவமனைக்கு வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் இந்த மருத்துவமனைக்கு மேலக் கால் திருமங்கலம் மெயின் சாலையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் சென்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் சாலையானது லேசான மழை பெய்தாலே சேரும் சகதியாகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது இதனால் மருத்துவமனைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் மேலும் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் வருபவர்கள் ஆட்டோ போன்ற வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றன இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர்களிடமும் பலமுறை எடுத்துச் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலையை செப்பனிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் ஆகையால் ஊராட்சி நிர்வாகம் மற்றும்.மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு இந்த சாலையை சரி செய்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *