மதுரை அருகே சித்திரைத் திருவிழா கள்ளழகரை பார்க்க சென்ற இளைஞர்கள் அட்டூழியம்; காரை சேதப்படுத்தும் சிசிடிவி கட்சி வெளியீடு.
மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. கள்ளழகரை காண மதுரை மட்டுமன்றி மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை மாநகரில் பகுதியில் கூடியிருந்தனர்.இந்த நிலையில் மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த காரை அந்த வழியாக சாமி தரிசனம் செய்ய சென்ற இளைஞர்கள் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கல்லை கார் மீது எறிந்து காரை சேதப்படுத்தி உள்ளனர்.மேலும் அவர்கள் அப்பகுதியில் உள்ள சிறிய கடை, இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது கார் மீது கல்லை கொண்டு சேதப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.