• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை…..

ByKalamegam Viswanathan

Feb 9, 2023

விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து முருகன் மீது வழக்குபதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர். இது குறித்த வழக்கு, திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளி முருகனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.